• Nov 17 2024

திறமையை விட படுக்கைக்கு தான் மவுஸ் அதிகம்- குமிறிய சாக்லெட் பாஃய் ஹுரோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் இவர் அண்மையில் பிரபல திரைப்படவிழாவில் கலந்து கொண்டு பேசிய விடயம் ஒன்று வைரலாகி வருகின்றது.

அதில் அவர் கூறியதாவது  ஒருவர் என்னை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று, நீங்கள் கடினமாக உழைப்பீர்களா இல்லை ஸ்மார்ட்டாக உழைப்பீர்களா என்று கேட்டார் என்றார்.


நான் ஸ்மார்ட் இல்லை. அதனால் கடின உழைப்பாளி என்று அந்த நபரிடம் பதில் அளித்தேன். அதற்கு அவரோ, டார்லிங், ஸ்மார்ட்டாகவும், செக்ஸியாகவும் இருக்க வேண்டும்  என ரன்வீர் சிங் தெரிவித்தார். நடிக்க வந்த புதிதில் மூன்றரை ஆண்டுகள் கஷ்டப்பட்டேன். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளின் மதிப்பை உணர அந்த மூன்றரை ஆண்டு அனுபவம் உதவுகிறது என்றார்.


பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக நடிகைகளை மட்டும் அல்ல நடிகர்களையும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது. இதை ரன்வீர் சிங் மட்டும் அல்ல மேலும் சில நடிகர்களும் தெரிவித்துள்ளனர். திறமையை விட படுக்கைக்கு தான் மதிப்பு அதிகம் என திறமைசாலிகள் குமுறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement