விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று 'மௌனராகம் 2'. இந்த சீரியலில் அடுத்தடுத்து பல விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் இந்த சீரியல் விரைவில் முடிவடைய இருப்பதாக ஏற்கெனெவே தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதுமட்டுமல்லாது இதன் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என ரசிகர்கள் பலரும் குழம்பிப் போயிருக்கின்ற இந்த நேரத்தில் இவை யாவற்றையும் உறுதிப் படுத்தும் வகையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கின்றது.
அந்தவகையில் 'மௌனராகம் 2' சீரியலினுடைய இறுதிநாள் ஷூட்டிங்கில் ஒட்டுமொத்த சீரியல் குடும்பமும் ஒன்றாக இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த சீரியல் முடிவடைவதால் ரொம்பவே பீல் பண்ணி வருகிறார்கள்.
Listen News!