விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து இதன் தொடர்ச்சியான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 குறித்த செய்திகள் கசியவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 விற்கான புரோமோ அண்மையில் வெளியாகி உள்ளது. ஆனால், இதில் ஸ்டாலின் முத்துவை தவிர அனைவரும் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ளனர்.
குறிப்பாக சுஜிதா, குமரன் தங்கராஜன் போன்ற மக்களுக்கு மிகவும் பேவரைட்டான நடிகர்கள் யாரும் இந்த சீசனில் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிப்பதற்காக முக்கிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிகர் அஜய் ரத்னம் இணைந்துள்ளார். இவர் சின்னத்திரை, பெரியதிரை என இரண்டிலும் நடிக்கும் பிரபலமான நடிகராவார்.
பெரிய திரையில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் கூடுதலாக நடிக்கும் அஜய் ரத்னம், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது தொடர்பில் இன்னும் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
எனினும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அஜய் ரத்னம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியளின் கிளைமாக்ஸ் காட்சிகள் இந்த வாரம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!