• Sep 20 2024

சீதா ராமம்' சக்சஸ் மீட்டில் இளவரசி போல கலந்து கொண்ட மிருணாள் தாகூர்- ஐந்து நாட்களுக்குள் இத்தனை கோடி வசூலா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்த மாதம் 5ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றியைப் பதிவு செய்து வரும் திரைப்படம் தான் 'சீதா ராமம்'. இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் ஆகியோர் நடித்துள்ளார்.

அந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போதே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.இந்நிலையில், தற்போது சீதா ராமம் எதிர்பார்த்ததை விட தரமான ஹிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. இப்படத்தில் துல்கர் ராணுவ வீரராக நடித்துள்ளார்.

இப்படம் வெளியான முதல் 3 தினங்களில் மட்டும் 23 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வந்தன. தற்போது 5 தினங்களில் 33 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சீதா ராமம் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, 'சீதா ராமம்' படத்தின் சக்சஸ் மீட் ஐதராபாத்தில் அசத்தலாக நடந்துள்ளது. இதில், இயக்குநர் ஹனு ராகவபுடி, ஹீரோ துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். துல்கர் சல்மான் கறுப்பு நிற பேண்ட், சட்டையில் செம்ம ஸ்டைலிஷாக என்ட்ரி கொடுத்தார். அதேபோல், நாயகி மிருணா தாகூர் 'சீதா ராமம்' படத்தின் இளவரசி கேரக்டரைப் போல, பூப் போட்ட அழகிய லெஹங்காவுடன் விழாவில் பங்கேற்றார். அவர்களது ஸ்டைலிஷ் லுக், ரசிகர்களை பரவசப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement