சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. இந்த சீரியலானது அதிரடித் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
அதில் கல்யாணப் பெண் அஞ்சலியை காணவில்லை என அனைவரும் பரபரப்புடன் காணப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது அஞ்சலி எங்கு சென்றார் எனத் தெரியாமல் விக்கியும் குழம்பிப் போய் இருக்கின்றார்.
அந்த சமயத்தில் அங்கு வந்த வேதநாயகம் அஞ்சலி எங்கே எனக்கேட்டு விக்கியை மிரட்டுகின்றார். மேலும் அஞ்சலியை விக்கி தான் கடத்தி விட்டார் என நினைத்து கல்யாணத்திற்கு வந்த அனைவரும் அவரை சூழ்ந்து கொள்கின்றனர்.
அதுமட்டுமல்லாது "அஞ்சலி எதுவும் தப்பான முடிவு எடுத்திருப்பாங்களோ, அஞ்சலிக்கு என்ன தான் ஆச்சு" என நினைத்து நினைத்து விக்கி தனக்குள்ளே புலம்புகின்றார். அத்தோடு அஞ்சலியை நான் கண்டு பிடித்தே தீருவேன் என்ற வீறாப்புடன் அங்கிருந்து கிளம்பிச் செல்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.
Listen News!