தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்கள் ஒன்றுமே கண்டுகொள்ளப்படாத நிலையில், மலையாள படங்கள் மாபெரும் ஹிட்டானது. அதிலும் மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையையே முறையடித்து இருந்தது.
இதை தொடர்ந்து தமிழில் வெளியான படங்கள் அத்தனையும் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் பின் தங்கிய நிலையில் காணப்பட்டபோது, மலையாளம், தெலுங்கு என பிறமொழிகளில் வெளியான படங்கள் அத்தனையும் சூப்பர் ஹிட் ஆனது.
அதன்படி இந்த ஆண்டு வெளியான மஞ்சுமேல் பாய்ஸ், ஆடு ஜீவிதம், பிரேமலு, மாதவன் ஜோதிகா நடிப்பில் வெளியான ஷைத்தான் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள் தான் தற்போது வரையில் முன்னிலையில் காணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக வெளியாகும் மலையாள திரைப்படங்களை பார்க்க தியேட்டருக்கு செல்லும் ரசிகர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.
அதாவது இந்த வாரம் தமிழில் வெளியான டியர் மற்றும் ரோமியோ படங்களை விட பகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதனால் அந்தப் படத்தை பிவிஆர் ஐனாக்ஸ் தியேட்டர்களில் வெளியிடவில்லை என்றும் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த மலையாள படங்களையும் அவர்கள் தூக்கி விட்டதாகவும் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.
தமிழ் படங்கள் மலையாளத்தில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், மலையாள சினிமா இப்போது மட்டும் இப்படி செய்வது சரியில்லை என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
Listen News!