• Nov 10 2024

ஒரே நேரத்தில் இரண்டு படம் எடுக்கும் முருகதாஸ்! ஒன்று SK 23 அப்ப மற்றது என்ன படம் ?

Nithushan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவையும் சரி தமிழ் சினிமா நடிகர்களையும் சரி அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்ற இயக்குனர்கள் என சிலரை கூறமுடியும். அவ்வாறு தமிழில் இன்றளவிலும் பேசுபொருளாக உள்ள கஜினி , கத்தி , துப்பாக்கி போன்ற படங்களை எடுத்தவர் இயக்குனர் AR முருகதாஸ் ஆவார். 


முன்னணி  இயக்குனராக இருக்கும் இவர் அஜித் நடித்த தீணா திரைப்படத்தின் மூலமே இயக்குனராக அறிமுகமாகினார். தொடர்ந்து பல ஹிட்களை கொடுத்த இவர் ரஜனி நடித்த தர்பார் படத்தின் மூலம் தோல்வியை  கண்டார் என்றே கூறவேண்டும். 


இந்த நிலையிலேயே சமீபத்தில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிவருகின்றார். இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி 45 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இதன் படப்பிடிப்பை இடையில் நிறுத்திவிட்டு சல்மான்கானை வைத்து இவர் இயக்க இருக்கும் சிக்கந்தர்  திரைப்படத்தை இயக்க போவதாகவும் அதில்  சிறுது காட்சிகள் முடித்துவிட்டு இங்கு வந்து SK படத்தை இயக்க போவதாகவும் வலைப்பேச்சு அந்தணன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement