மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் ஏ.ஆர். ரஹ்மான்.இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்து ஆஸ்கார் நாயகனாக வலம் வருகின்றார்.
இவருடைய சகோதரியின் மகன் தான் ஜி.வி. பிரகாஷ், இவர் ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற 'சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே' பாடலின் மூலம் குழந்தை பாடகராக இசையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இசையின் மீது இருந்த ஆர்வத்தில் தொடர்ந்து தனது தாய்மாமா ஏ.ஆர். ரஹ்மான் உடனே பயணிக்கத் தொடங்கினார் ஜி.வி.பிரகாஷ்.
இதனைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தில் 'வெயிலோடு விளையாடி' 'உருகுதே மருகுதே' என பாடல்களிலும், பின்னணி இசையிலும் வெரைட்டி காட்டி அசத்தினார்.
இதன் பின்பும் பல படங்களுக்கு இசையமைத்து வந்த இவர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கும் இசையமைத்திருந்தார்.அப்படத்திற்காக தேசிய விருதினையும் பெற்றுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இதுவரை 5 தேசிய விருதுகளை வென்றுள்ள நிலையில், அவரது குடும்பத்தில் இருந்து ஜி.வியும் இப்போது முதல் தேசிய விருதை வென்றுவிட்டார் இதனால் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- முக்கிய விழாவில் மாறி மாறி கிண்டலடித்த உதயநிதியும் அவரது மனைவியும் -விழுந்து விழுந்து சிரித்த சிம்பு
- சுவரில் ஒட்டியிருக்கும் பல்லி போன்று தான் ரன்வீர் சிங்- நிர்வாண போட்டோவை வைத்து நெட்டிசன்கள் செய்யும் அட்ராசிட்டி
- முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்ற நடிகர் சூர்யா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!