• Sep 21 2024

போதைப் பொருளை எடுத்துக் கொண்டால் தான் இசையமைக்கவே முடியும்- இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் அனிரூத்திடம் இருந்து தற்பொழுது முக்கிய இசையமைப்பாளராக இடம் பிடித்திருப்பவர் தான் சந்தோஷ் நாராயணன். இவர் பீட்சா, சூது கவ்வும், மெட்ராஸ், காதலும் கடந்து போகும், ஜிகர்தண்டா, கபாலி, காலா போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் இப்போதிருக்கும் இளைஞர்கள் நிறைய பேர் போதைப் பொருட்களுக்கு பழக்கப்பட்டவர்கள் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. குறிப்பாக மேலைநாட்டில் இசை கலைஞர்கள் போதைப் பொருட்களை எடுத்துக் கொண்டுதான் இசையமைத்து மேடைகளில் கூட நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவார்கள். அதனை பின்பற்றிக்கொண்டு அதனை உட்கொண்டால் இன்னும் சிறப்பாக இசையமைக்கலாம் என்ற நம்பிக்கையில் பணிபுரிவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் தான் டீ, காஃபி கூட குடிக்காத டீடோட்டலர். நான் எந்த போதைப் பொருளையும் எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆனால் அப்படி எடுத்தால்தான் நல்ல இசை வரும் என்ற நம்பிக்கையை உடைப்பதற்காகவே சில பாடல்களை ட்ரிப் ஆனது போல் இசையமைப்பேன். அந்தப் பாடல்களும் வெற்றி பெற்றுள்ளன. சிலர் அந்த பாடல்களை கேட்டுவிட்டு, "என்ன மச்சான் ட்ரிப்பாகி தானே இந்தப் பாட்ட கம்போஸ் பண்ண?" என்று தன்னிடம் கேட்டுள்ளார்களாம்.

ஒரு நண்பர் இவருக்கு போதைப் பொருளை எடுத்துக் கொண்டு கம்போஸ் செய். இசை இன்னும் சிறப்பாக வரும் என்று ஆலோசனையும் கூறியுள்ளாராம்.அதனை பொய் என்று நிரூபிப்பதற்காக சொன்ன அந்த நபரையே போதைப் பொருள் எடுக்க வைத்து இசையமைக்கச் சொல்லி, அதனை இவர் படம் பிடித்து பின்னர் தெளிவாக இருக்கும் போது போட்டு காண்பித்தாராம். பார்க்க கேவலமாக இருக்கிறது என்று அந்த நண்பருக்கே தோன்றும் வகையில் அந்தச் சம்பவம் இருந்ததாக சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement