சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நீதிபதியாக கலந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன் பாடகர்களோடு இயல்பாக பழகுவதில் ஆரம்பித்து, அவர்களுக்கு பல சர்ப்ரைஸ் தந்து வருகிறார். பல பாடகர்களுக்கும் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை தரும் வாய்ப்பை வழங்கி வருகிறார்.
சிறுவர்களுக்காக தற்போது நடந்து வரும், சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 வது சீசனில் தான், நீதிபதியாக கலந்துகொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் தமன்.
இந்த சீசன் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில், பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
தமன் நீதிபதியாக அல்லாமல், அனைவருடனும் மிக சகஜமாக பழகி, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
மேலும் ஒரு ஆச்சர்யமாக இசையமைப்பாளர் தமனின் மனைவி, அவருக்கே தெரியாமல் சர்ப்ரைஸாக நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டார். அப்போது யாரும் அறியாத, தமனின் பல பர்ஸனல் பக்கங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது தான், ஓய்வு நேரத்தில் தமன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் மா கா பாவுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் செய்தியை பகிர்ந்தார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி, கலகலப்போடும் பல நெகிழ்ச்சி சம்பவங்கள் நிறைந்ததாகவும், அற்புதமானதாக நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!