நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு யாவும் தற்பொழுது நிறைவடைந்துள்ளது.இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்னும் படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து தளபதி 67 படமும் வேற லெவல் வெற்றி பெறும் என்று நம்பப்படுகின்றது.
இந்நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அதில் பெரிய ட்விஸ்ட் ஒன்று கிளம்பியுள்ளது. அது என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப்போவதாக பேசப்பட்டு வருகிறது.
இதனால் யுவன் - விஜய் காம்போவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைத்துள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!