• Sep 20 2024

வணங்கான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் கொடுத்த புதிய அப்டேட்- செம குஷியில் சூர்யா ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

'வணங்கான்' படத்திற்கான பாடல் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளது என படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் 'அப்டேட்' கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வணங்கான். இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருப்பதோடு கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி கமிட்டாகியிருந்தார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் ஆரம்பமாகி நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.  இந்நிலையில் வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆனால்  கதை குறித்து இயக்குநர் பாலா விவாதம் செய்து தாமதம் ஆக்கி வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கும் “சூர்யா 42” படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் வணங்கான் திரைப்படம் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் வணங்கான் படத்தின் பாடல்பதிவு தற்போது நடந்துள்ளதாகக் கூறியுள்ளார். இதையடுத்து விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement