• Sep 20 2024

நீண்ட ஆயுள் பெற பிரபல்யமான கோயிலில் பூஜை நடத்திய இசைஞானி இளையராஜா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூத்த இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் இதுவரைக்கும் 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதும் முக்கியமாகும்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் என்னும் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணா அபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களைச் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இவ்வாறு சிறப்புப் பொருந்திய கோயிலுக்கு நேற்றைய தினம் இளையராஜா சென்றுள்ளார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்தைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியம் இசைக்க கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

அத்தோடு இளையராஜாவும் கோ பூஜை மற்றும் கஜ பூஜை செய்தார். அதைத் தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

இன்று காலை 6 மணி முதல் 8 மணிக்குள் இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, நடிகர் பிரேம்ஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement