• Sep 21 2024

கண்டிப்பாக அஜித் சேருடன் மீண்டும் இப்படிப் போகணும்-நடிகை மஞ்சுவாரியாருக்கு ஏற்பட்ட திடீர் ஆசை

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் ஜனவரி 11ம் தேதி வெளியான தரைப்படம் தான் துணிவு. இப்படத்தில் பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக இப்படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகளில் நடித்து ரசிகர்களன் பாராட்டைப் பெற்றார்.

துணிவு படத்தில் நடித்தபோது அஜித் தன் ஸ்போர்ட்ஸ் பைக்கை எடுத்துக் கொண்டு ரைடிங் சென்றார். நீங்களும் வாங்களேன் என அவர் மஞ்சு வாரியரிடம் கூறியிருக்கிறார். ஓகே, வருகிறேன் என மஞ்சுவும் சந்தோஷமாக கிளம்பிச் சென்றார். அந்த பைக் பயணத்தின்போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.


அஜித் மற்றும் அவர் குழுவுடன் சேர்ந்து ரைடிங் சென்ற முதல் நடிகை மஞ்சு வாரியர் தான். லே-லடாக், காஷ்மீர் என 2 ஆயிரத்து 500 கிலோமீட்டர் பயணம் செய்தார். ரைடிங் வாங்க என அஜித் தன்னை அழைப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை என்றார் . மழை முதல் பனிமழை வரை பார்த்தேன். ரைடிங் சென்ற அனைவரும் சேஃப்டி கியர் அணிந்திருக்க வேண்டும் என்பதில் அஜித் கவனமாக இருந்ததாக  தெரிவித்தார்.


அந்த பைக் ரைடிங்கிற்கு பிறகு கேரளா திரும்பிய இவர் 2 சக்கர வாகன லைசென்ஸ் எடுத்திருக்கிறார். 2 நாட்களுக்கு முன்பு லைசென்ஸ் வாங்கியிருக்கிறார். இந்நிலையில் பிஎம்டபுள்யூ பைக் வாங்கி, அஜித் குமாருடன் சேர்ந்து மீண்டும் ரைடிங் செல்ல ஆசைப்படுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement