தமிழ்த்திரை உலகின் பிரபல இயக்குநரான முத்தையா, தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த மாதம் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
விஜய் முத்தையாவுக்கு ஜோடியாக தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா இருவரும் ஜோடியாக நடித்து வரும் நிலையில், கிராமத்துப் பின்னணியில் ஆக்சன், ரொமான்ஸ், சென்டிமென்ட் கலந்த படமாக இந்த படம் உருவாகி வருகிறது.
கே.கே.ஆர் சினிமா சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஜென் மாட்டின் இசையமைக்கின்றார்.
இந்த நிலையில், இயக்குநர் முத்தையா தனது மகனுக்கு வில்லனாக நடிக்க பிரபல ஹீரோவை களம் இறக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, பிரபல நடிகரான பரத் தற்போது விஜய் முத்தையா ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனா நடிக்கவுள்ளராம்.
ஏற்கனவே பல படங்களில் ஹீரோவாக நடித்த பரத், ஒரு சில படங்களில் வில்லனாக நடித்த நிலையில், தற்போது அவர் மீண்டும் வில்லனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!