• Sep 20 2024

அண்ணாமலை பற்றி தவறாகப் பேசியதால் மனோஜின் விரலை முறித்த முத்து- மீனாவின் முகத்தில் காஃபியை கொட்டிய விஜயா-Siragadikka Aasai Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய தினம் விஜயா ரோகினியுடன் சேர்ந்து யோகா பயற்றி செய்கின்றார். அப்போது மீனா வீடு பெருக்கிட்டு இருக்கும் போது மீனாகை் கூப்பிட்டு தனக்கும் ரோகினிக்கும் காஃபி போட்டிட்டு வரும்படி கூறுகின்றார்.

பின்னர் இருவரும் மேலே சென்று யோகா செய்திட்டு இருக்கும் போது மீனா கசாயம் போடடுக் கொண்டு போய் கொடுக்க அதை வாங்கிக் குடித்து விட்டு விஜயா கசப்பாக இருக்கின்றது என்று மீனா படியால் இறங்க மீனாவின் முகத்தில் கொட்டி விடுகின்றார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த மீனா வேணாம் என்றால் திரும்ப தந்திருக்கலாம் தானே அத்தை.


எதுக்கா முகத்தில கொட்டினீங்க எதுக்காக பொட்களை வேஸ்ட் பண்ணுறீங்க என்று சொல்ல விஜயா இப்போ கொட்டினால் என்ன என்று கேட்க இது என் புருஷன் சம்பாதிச்ச காசில வாங்கினது என்று சொல்ல ரோகினியும் விஜயாவும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர்.பின்னர் தற்செயலாக மேல வந்த ரவி இந்த விஷயத்தை அறிந்து விஜயாவையும் ரோகினியையும் திட்டுகின்றார்.

தொடர்ந்து முத்துவை் சந்திக்கும் ரவி நீ எதுக்கு அண்ணி மேல இவ்வளவு கோபத்தை காட்டுற, அவங்க தான் உன்னை வெளில எடுத்தாங்க இல்லை என்றால் நீ ஜெயில்ல களி தான் சாப்பிட்டுக் கொண்டிருப்ப, நீ அண்ணியை மதிக்காமல் இருக்கிறதால வீட்ல அம்மா அண்ணியை எவ்வளவு கஷ்டப்படுத்திறாங்க தெரியுமா?

அண்ணி வந்ததால் தான் வீட்டில எதுவும் சரி இல்லை என்று அம்மா சொல்லுறங்க அது மாதிரி தானே இப்போ நீயும் அண்ணி மேல குறை சொல்லிட்டு இருக்கிற என்று திட்ட முத்து இதெல்லாம் எப்பிடி எனக்கு தெரியும் எனக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருக்கு என்று சொல்ல ரவி இதெல்லாம் ஒரு நாள் எல்லாம் சரி ஆகிடும். உன்னோட தப்பை மற்றவங்க மேல திணிக்காத என்று சொல்ல முத்து யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது. 


தொடர்ந்து வெளியாகிய ப்ரோமோவில் முத்து,மீனா,ரோகினி,மனோஜ்,ரவி எல்லோரும் ஹொட்டல் ஒன்றில் சாப்பிடப் போகின்றனர். அப்போது அண்ணாமலை பற்றி மனோஜ் தவறாகப் பேசியதால் முத்து மனோஜிற்கு அடித்து விடுவதோடு மனோஜின் விரலையும் முறித்து விடுகின்றார். இத்துடன் இந்த ப்ரோமோவும் முடிவடைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement