விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கம் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இதில் விஜயா ரகசியமாக மனோஜை சென்று பார்த்து வரும் விடயம் மீனாவுக்கு தெரிந்து விட்டதால் மீனா தனது மாமனாருக்கு உண்மையை கூறிவிட்டார். இதனால் மாமனார் மனோஜ் இருக்கும் இடத்திற்கே நேராகச் சென்று சண்டை பிடித்தார்.
இப்படியான நிலையில் மனோஜ் திரும்ப வீட்டிருக்கு வருகின்றார். இதனைப் பார்த்ததும் முத்து மனோஜை போட்டு அடிக்கின்றார்.அத்தோடு வீட்டை விட்டு துரத்துகிறார்.
இருந்தாலும் விஜயா மனோஜ் பணத்தை எப்படியாவது திரும்ப தந்து விடுவான் என்று சொன்னதும் முத்து அப்பிடி என்றால் இன்னும் 6 மாதத்தில பணத்தை கொடுத்திடுவேன என்று அம்மா மேல அடிச் சத்தியம் பண்ணு என்று சொல்கின்றார். இதனால் விஜயா என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!