• Sep 20 2024

மீனாவை அசந்து போய் பார்த்த முத்து..அதிர்ச்சி கொடுத்த பாட்டி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து தன்னுடைய நண்பர்களுடன் அரட்டை அடித்து பேசிக் கொண்டிருக்க அப்போது அவர்கள் கல்யாணம் முடிந்ததும் பிரண்ட்ஸ் யாரும் வாரதே கிடையாது நீயும் அப்படி மாறிடுவாய் என சொல்ல முத்து ஃபிரண்ட்ஸ் எல்லாம் ஆதிகாலத்தில் இருந்து கூட இருக்காங்க, மனைவி எல்லாம் பாதியில வந்தவங்க அவங்க சொல்றது எல்லாம் கேட்கக்கூடாது என வசனம் பேசிக் கொண்டிருக்க நண்பர்கள்கள் சாப்பிட கூப்பிடுகின்றனர். ‌‌‌

அந்த சமயம் பார்த்து மீனா அங்கு வந்து வீட்டுக்கு வாங்க என்று சொல்ல முத்து நீ போ நான் அப்புறம் வருகிறேன் என சொல்கிறார். பாட்டி கையோட கூப்பிட்டு வர சொன்னாங்க இல்லன்னா அவங்களே இங்கு வருவாங்க என்று சொல்ல முத்து அலறி அடித்து ஓடி வருகிறார்.

அதன் பிறகு மீனாவும் முத்துவும் பேசிக்கொண்டு வரும்போது ஒரு கார் டிரைவர் பிளாஸ்டிக் பாட்டிலை கீழே போட்டுவிட்டு செல்ல மீனா காரை நிறுத்தி அவருக்கு கிளாஸ் எடுத்து இந்த பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து அவரிடம் கொடுத்து அனுப்ப முத்து மீனாவின் திறமையை பார்த்து பாராட்டுகிறார்.

அப்போது பாட்டி அடிச்சா பயங்கரமா வலிக்கும், அது விவசாயம் பார்த்த கை.. உன்னோடதெல்லாம் பூ கட்டுன கை என நக்கலாக சொல்ல மீனா முத்துவை அடிக்க முத்து திருப்பி இடிக்க என இருவரும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நடந்து செல்ல ஒரு பாட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க, இப்படித்தான் இருக்கணும் என சொல்லிவிட்டு போக மீனா வெட்கப்படுகிறார்.

மறுபக்கம் ரவி வேலைக்கு போன ஹோட்டலில் வித்தியாசமான டிஸ் செய்து கொடுத்து ஓனரை கவருகிறார். பென்ஷன் ஆபிஸர் வீட்டில் அவருடைய மகள் டப்பிங் ஸ்டுடியோ கிளம்ப கல்யாணம் பற்றி பேச்சு எடுக்க அவர் எனக்கு பிடித்த மாதிரியா அப்பாவியை நானே தேர்வு செய்து கொள்வேன் என சொல்லி கிளம்புகிறார்.

அடுத்து வீட்டில் முத்து சாப்பிட உட்கார பாட்டி மீனாவை பரிமாற சொல்ல பிறகு மீனாவுக்கு முத்துவை பரிமாற சொல்லி இருவரையும் சாப்பாடு மாறி மாறி ஊட்டி கொள்ள சொல்கிறார். முதலில் முத்து பாட்டி பேச்சை தட்ட முடியாமல் மீனாவுக்கு ஊட்டி விடுகிறார்.

அதன் பிறகு இனி நான் ஓட்டிவிட போக முத்து வெறித்தனமாக வாயை திறந்து கொண்டு வர மீனா பாட்டி என கத்துகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement