விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதாவது ரவி வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ததற்கு மீனா தான் காரணம் என்று முத்து தவறாக நினைத்ததால் முத்து மீனாவை விட்டுத் துரத்தி விட்டார். மீனா நேராகச் சென்று பேசியும் முத்து கேட்பதாக இல்லை.
இதனால் முத்துவைப் பேசிவிட்டு மீனா போய் விட்டதால் முத்து குடித்து விட்டு காரில் போகும் போது தன்னுடைய நண்பரை வைத்து மீனாவிற்கு போன் பண்ணி பேச வைக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!