'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கி, தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும், திரும்பிப் பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தற்போது நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து இயக்கி உள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
உதயநிதி முழு நேர அரசியலில் கவனம் செலுத்தி வருவதால், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் 'மாமன்னன்' திரைப்படம் தான் தன்னுடைய கடைசி படம் என அறிவித்துள்ளார். எனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு எகிறியுள்ளது.
இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, இதுவரை நடித்திராத வித்யாசமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மிக பிரமாண்டமாக ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.இம்மாதம் கடைசி வாரத்தில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா, மிகப் பிரமாண்டமாக நடந்தது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், 'மாமன்னன்' படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் பேசுகையில், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, 'மாமன்னன்' ஒரு பெரிய படம். ரொம்ப நாள் கழிச்சு தமிழில் என் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் உதை சார், மாரி சார், பகத், வடிவேலு சார், ரகுமான் சார், என பெரிய கூட்டணியில், இப்படம் உருவாகியுள்ளது. 'மாமன்னன்' படத்தில் நானும் இவர்களுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட். என்னுடைய கதாபாத்திரம் ஒவ்வொரு பெண்ணுடன் கண்டிப்பாக கனெக்ட் செய்து பார்க்க முடியும். அதே போல் வடிவேலு சார் மற்றும் உதை சார் இருவரும் படத்தில் வேற மாதிரி இருப்பார்கள். ஸ்கிரீனுக்கு பின்னால் மிகவும் ஜாலியாக எந்த நேரமும் சிரித்து கொண்டே இருப்பார்கள். இயக்குநர் தான் ரொம்ப கஷ்டப்பட்டார். காரணம் எந்த நேரமும் சிரித்துக் கொண்டே இருப்போம் ஷூட்டிங் ஸ்பாட்டில். ஆனால் படம் அப்படி இருக்காது என கூறி, இது ஒரு சீரியஸான கான்செப்ட் படம் என்பதையும் உறுதி செய்துள்ளார்.
Listen News!