• Nov 19 2024

என் குழந்தைக்கு என் DNA இருக்கணும்னு அவசியம் இல்லை... பப்ளிக்கில் பதிலளித்த சன்னிலியோன்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகையாகவும், கனவு நாயகியாகவும் வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது தர்ஷா குப்தா, யோகி பாபு, சதீஷ், ஜிபி முத்து உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து காமெடி பேய் படமான 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இப்படமானது விரைவில் வெளியாக காத்திருக்கிறது. 


அந்த படத்தின் உடைய ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியானது சென்னையில் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜே அர்ச்சனா, ஆர்ஜே விஜய் ஒன்றாக இணைந்து தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் சதீஷ், ஜிபி முத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

அதுமட்டுமல்லாது சன்னி லியோனுக்கு ஜிபி முத்து பால்கோவா ஊட்டி விடுறதும், பதிலுக்கு அவங்க ஜிபி முத்துவுக்கு பால்கோவா ஊட்டிவிடுவதுமாக நேற்றைய ஓ மை கோஸ்ட் நிகழ்ச்சி சென்னையில் படு ஜோராக களைகட்டியது. 

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் புள்ளைய பார்க்க போகணும்.. புள்ளைய பார்க்க போகணும்னு அடம்பிடிச்ச ஜிபி முத்து இந்த புள்ளைய பார்க்கத்தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாரா என கலாய்த்து வருகின்றனர்.


இந்நிலையில் சென்னைக்கு வந்த சன்னி லியோனிடம் எடுத்த பேட்டி ஆனது தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அதில், சன்னி லியோனிடம் கேட்கப்பட்ட பல ஹாட்டான கேள்விகளுக்கு அவர் கொஞ்சம் கூடத் தயங்காது அதிரடியாக பதில் அளித்து ஸ்கோர் செய்துள்ளார். 

மேலும் ஆபாச பட நடிகையாக இருந்து வந்த சன்னி லியோன் பின்னர் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக மாறினார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்த சன்னி லியோன் நிஷா எனும் பெண் குழந்தையை முதலில் தத்தெடுத்து வளர்த்தார். 


அதனை பின்னர் வாடகைத்தாய் மூலமாக இரு ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இந்நிலையில் குழந்தைகள் பற்றியும் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு "என்னோட குழந்தைகளுக்கு என் டிஎன்ஏ இருக்கணும்னு அவசியமில்லை. குழந்தைகளை அன்போடு அரவணைத்து வளர்த்தால் போதும்" என அசால்ட்டாக பேசி உள்ளார் சன்னிலியோன். இவரின் இந்தப் பதிலானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement