• Sep 20 2024

அவர் பெயரை சொன்னாலே என் முகம் பிரகாசம் -அமலாவுக்கு முதல் நாகர்ஜுனா காதலித்தது யாரைத் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் 90களில் இருந்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் நாகர்ஜுனா. இவர் தமிழ் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் தற்பொழுது 20 வருடங்கள் கழித்து மீண்டும்  பிரம்மாஸ்திரா படம் மூலமாக மீண்டும் ஹிந்தியில் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பானது நிறைவடைந்து தற்பொழுது போஸ்ட் புரடெக்ஷன் பணி நடைபெற்று வருகின்றது.அந்த படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தற்போது பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகிறார். 


 நாகர்ஜுனா ஹிந்தி நடிகை தபு உடன் இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார்.அவர்கள் காதலில் இருந்ததாக அப்போது கிசுகிசு வந்தது தற்போதைய இளம் தலைமுறையினருக்கு பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் அவர்கள் அது பற்றி வெளிப்படையாக பேசியதே இல்லை.

ஒருமுறை ஒரு பிரபல பத்திரிக்கைக்குக் நாகர்ஜுனா அளித்த பேட்டியில் "தபு என்னுடைய நல்ல பிரெண்ட். நான் 21 அல்லது 22 வயதில் இருந்தபோது அவருக்கு 16 வயது. அப்போது இருந்தே நாங்கள் பிரெண்ட்ஸ். அவரை பற்றி மறைக்க எதுவும் இல்லை. அவர் பெயரை சொன்னாலே என் முகம் பிரகாசம் ஆகும். அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும், அதுஉங்களது பாயிண்ட் ஆஃப் வியூ" என நாகார்ஜூனா தெரிவித்து இருக்கிறார்.


நாகர்ஜுனாவின் மனைவி அமலாவும் தபுவுக்கு தோழி தான். தபு எப்போதாவது ஹைதராபாத் வந்தால் அவர்கள் வீட்டில் தான் தங்குவாராம் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement