கோலிவுட்டில் தனது திறமையை நிரூபித்த நடிகர் தனுஷ் தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். இவர் சிறந்த நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவராகவும் விளங்கி வருகின்றார்.
எது எவ்வாறாயினும் தனுஷ் இன்று உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பதற்கு முக்கிய காரணம் அவரின் அண்ணன் செல்வராகவன் தான் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் நடிகர் தனுஷ் பேட்டி ஒன்றில் இசைப் பிரபலம் ஒருவர் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
அதாவது தான் தயாரித்த பட தோல்விகளால் நஷ்டமடைந்த தந்தை கஸ்தூரி ராஜா, சொந்த ஊருக்கே செல்ல முடிவு செய்தாராம். அதில் சற்றும் உடன்பாடு இல்லாத செல்வராகவன், இறுதியாக படத்தை தான் இயக்குகிறேன் என கேட்டுள்ளார்.
அவ்வாறு வெளியான ஒரு படம் தான் துள்ளுவதோ இளமை. இந்த படம்தான் தனுஷின் முதல் படம். இந்த படம்தான் கஸ்தூரி ராஜா குடும்பத்தினரின் தலை எழுத்தையே மாற்றியதாக தனுஷ் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான காதல் கொண்டேன், புதுபேட்டை போன்ற படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைத்தார். இந்த படங்களின் வெற்றிக்கு அதில் இடம்பெற்ற பாடல்களும் முக்கிய காரணம்.
அந்தவகையில் யுவன் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டானது. இந்நிலையில் அப்பேட்டியில் தனுஷ் தொடர்ந்து பேசுகையில், தனது ஆரம்ப கால திரைப்படங்கள் வெற்றி பெற்றது யுவன் சங்கர் ராஜாவால்தான் என மிகவும் நெகிழ்ச்சியுடன் முதன் முதலாக ஓப்பனாக கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.
அத்தோடு தனது குடும்பம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் தான் முக்கிய காரணம் என்றும் உருக்கமாக கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.
Listen News!