சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். சீரியலை வெறுக்கிறவர்கள் கூட இந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் அந்த தொடரில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்துதான்.
பேச்சிலும் செயலிலும் ஒரு நேர்மை இருக்கும்.இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சொந்த மண்ணை விட்டு சென்னைக்கு வந்த மாரிமுத்து இரண்டு படங்களை இயக்கினார். ஆனால் சினிமா அவரை வேறு பாதைக்கு கொண்டு சென்றது. நடிகராக்கி அழகு பார்த்தது.சினிமாவில் அவருக்கு என்று ஒரு தனி அடையாளமே இருக்கின்றது.அப்படி இருந்தும் சின்னத்திரைக்குள் வந்து அங்கும் தடம் பதித்தார். ஒரே ஒரு சீரியல்தான். ஒட்டுமொத்த புகழையும் தட்டிச் சென்றார். எதிர்நீச்சல் சீரியலில் எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் அவருக்காகவே பார்த்த ரசிகர்கள்தான் ஏராளம்.
இதுவரை 100க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் இறுதியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.இந்த நிலையில் இவர் டப்பிங் பேசச் சென்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் தானாகவே ஹாஸ்பிட்டலுக்குச் சென்றிருக்கின்றார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரது மகன் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது அப்பாவின் இறுதிச்சடங்கில் எங்களோடு கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. அப்பாவின் இழப்பு தாங்க முடியாத ஒன்று தான். அதிலிருந்து எப்படி மீண்டு வரப்போகின்றோம் என்று தெரியவில்லை.
அப்பா தான் செய்யனும் என்று நினைத்த பல விஷயங்களை நான் செய்து முடிப்பேன். அவரது ஆசையே நான் சினிமாவிற்குள் வரக்கூடாது என்பது தான் . இனிமேல் சினிமாவிற்குள் வருவனா என்று தெரியவில்லை.கண்டிப்பாக அவரது ஆசையை நிறைவேற்றுவேன் என்று நினைக்கின்றேன்.எங்களுக்கு அப்பா இல்லாமல் போனது எவ்வளவு பெரிய இழப்போ, அதே மாதிரி தான் எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்களுக்கும் இருக்கும். அவங்க நேற்று முழக்க எங்க கூடவே இருந்து எல்லாம் பண்ணினாங்க. அவங்களை சந்தித்து பேசனும் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!