• Nov 14 2024

என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத ஃபேவரைட் ரசிகை அந்தப் பெண் தான்- யாரும் அறிந்திடாத ரகசியத்தைக் கூறிய தனுஷ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நேற்றைய தினம் தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடி இருந்தார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிலபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.இவரது நடிப்பில் தற்பொழுது திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.

இந்நிலையில் தனுஷ் முன்னதாக கொடுத்த பேட்டி ஒன்று தற்பொழுது வைரலாகியுள்ளது. அதில் தான் சந்தித்த அவமானங்கள் பற்றியும் தனக்கு கிடைத்த ரசியை பற்றியும் கூறியுள்ளார்.

அதாவது துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷை நடிக்கச் சொன்ன போது அவர் தயங்கினாராம். காரணம் தனது தோற்றத்தை பலரும் கேலி செய்வார்கள் என்று. ஆனால் கஸ்தூரி ராஜா மற்றும் செல்வராகவனின் பேச்சைக் கேட்டு அதில் கதாநாயகனாக நடித்தார். படப்பிடிப்பு ஆந்திராவில் நடக்கும் போது அங்குள்ளவர்கள் யார் கதாநாயகன் என்று இவரிடமே கேட்பார்கள் என்றும் அப்போது தனக்கு அடுத்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகரை காட்டி அவர் தான் ஹீரோ என்று சொல்வேன் என்றும் தனுஷ் முன்னதாக கூறியுள்ளார். படம் வெளிவந்த போதும் பத்திரிகையாளர்களும் மக்களும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

அதேபோல காதல் கொண்டேன் திரைப்படத்தில் கண்ணாடி போட்டுக்கொண்டு தாடி வைத்துக்கொண்டு ஒரு ஊரில் நடித்துக் கொண்டிருந்தபோது பொதுமக்களில் ஒருவர் யூனிட்டில் இருப்பவரிடம் யார் கதாநாயகன் என்று கேட்க, தனுஷை கைகாட்டியுள்ளார். அதற்கு அந்த நபர் சத்தமாக சிரித்து இவர்தான் ஹீரோவா அப்பொழுது நானும் ஹீரோதான், அங்கு நிற்கும் ஆட்டோக்காரனும் ஹீரோதான், அனைவரும் ஹீரோதான் என்று சத்தமாக சொல்ல அதை கேட்ட அங்கிருந்த மக்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.

தனுஷ் அவமானம் தாங்காமல் நிற்கும் பொழுது கூட்டத்திலிருந்து ஒரே ஒரு பெண் மட்டும் தன்னிடம் வந்து ஆட்டோகிராஃப் கேட்டதாகவும் ஏன் என்னிடம் கேட்கிறாய் என்று தான் கேட்டபோது உங்களது துள்ளுவதோ இளமை பார்த்தேன் எனக்கு பிடித்த படம் அதனால் தான் கேட்கிறேன் என்று அந்தப் பெண் சொன்னதாகவும், அந்தப் பெண்தான் தன் வாழ்நாளில் என்றைக்குமே தன்னுடைய ஃபேவரைட் ரசிகை என்றும் தனுஷ் நெகிழ்ந்து கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement