பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் இந்த சீசன் போட்டியாளர்களின் கலை நிகழ்ச்சிகள் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. அதற்கு நடுவே கமல் இந்த சீசன் போட்டியாளர்களுடன் பேசிய கலந்துரையாடலில் மீண்டும் தமிழ்நாடு முழக்கம் ஒலித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தமிழகம் என ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதில் இருந்தே இந்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ்நாட்டில் பல பெண்களும் தமிழ்நாடு கோலம் போட்டு பதிலடி கொடுத்து வந்தனர்.
டிடி நீலகண்டன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற போது கூட விக்ரமனை வைத்து தமிழ்நாடு பெருமைகளை பேச வைத்திருந்தார். இந்நிலையில், கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தமிழ்நாடு பற்றி உரக்க பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
13 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அமுதவாணன் சம்பளமாகவும் 15 லட்சத்துக்கு மேல் வாங்கி உள்ளார். இந்நிலையில், கமல்ஹாசன் உடன் பேசும் போது ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்துக்கு நல்ல காரியம் செய்வதற்காக ஒரு லட்சம் தர முனைகிறேன் சார் என கமலிடம் சொல்ல அவரை கமல் பாராட்டினார்.
தமிழகம் கூட அல்ல தமிழ்நாடு தான் எனக்கு பிடித்தது. தூத்துக்குடியை டுட்டிக்கொரின் என்று சொன்னால் பிடிக்காது திருச்சிராப்பள்ளியை ட்ரிச்சின்னு சொன்னா பிடிக்காது. அது போல நம் தமிழ்நாட்டை எப்போதுமே தமிழ்நாடு என்று தான் சொல்ல வேண்டும் என பிக் பாஸ் மேடையில் மீண்டும் தமிழ்நாடு பெயர் ஓங்கி ஒலிக்கும் விதமாக கமல் பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!