• Nov 17 2024

எனது படத்திற்கு உரிய நேரத்தில் அங்கிகாரம் கிடைக்கவில்லை- விருது பெற்றது குறித்து உருக்கமாக பேசிய நடிகர் சித்தார்த்

stella / 2 years ago

Advertisement

Listen News!

2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான சிறந்த படங்களுக்கான தமிழ்நாடு அரசின் விருது  வழங்கும் நிகழ்வானது நேற்றைய தினம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதனால் இந்த விழாவில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரைப்பட மற்றும்  செய்து துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அறநிலைய துறை பி. கே. சேகர்பாபு, சென்னை மேயர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்


இந்த நிகழ்ச்சியில் சிறந்த திரைப்படம், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என மொத்தம் 160-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட்டது. விக்ரம், ஆர்யா, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், அஞ்சலி, விக்ரம் பிரபு, பாண்டியராஜன், நா. முத்துக்குமார் என பலருக்கும் விருதுகளும், தங்க பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு காவியத்தலைவன் படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இதுகுறித்து நடிகர் சித்தார்த் உருக்கமான பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. விருது பெற காரணமான படக்குழுவிற்கு நன்றி கூறிய சித்தார்த், படத்திற்கு உரிய நேரத்திற்குள் அங்கிகாரம் கிடைக்கவில்லை என்றாலும், தற்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என கூறியுள்ளார். 


தமிழ் மொழி வரலாற்று நாடகமான இதில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா மற்றும் அனைகா சோதி  நாசர், தம்பி ராமையா, பொன்வண்ணன், மன்சூர் அலிகான் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இப்படம் உருவாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement