நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்பு அடுக்கடுக்காய் குவிந்தன.அது மட்டுமல்லாது சின்னத்திரையில் கெஸ்ட் ரோலும் நடித்து கொண்டே இருக்கின்றார்.
இந்நிலையில் வனிதா தனது மகன் பிறந்தநாளிற்கு வாழ்த்து தெரிவித்து பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே பல சர்ச்சைகள் வனிதாவை சுற்றி அரங்கேறின. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் வலைத்தளத்தில் பலரும் பதிவுகள் பகிர்ந்து வந்தனர். எனினும் அதன்பின்னர் பிக்பாஸில் இருந்து வெளிய வந்த பிறகு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார்? பிக்பாஸ் ஜோடிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
சினிமாவிலும் நடித்து வரும் வனிதா யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன்பின்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரையும் விட்டு பிரிந்தார். தற்போது தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார் வனிதா.
மேலும் இவரது மகன் ஸ்ரீஹரி தன் தாத்தா விஜயகுமார் உடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி இன்று தனது 21 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள வனிதா ‘என்னுடைய முதல் காதல் என்றும் நீதான். அன்பு எப்போதும் அளவற்று இருக்க வேண்டும், தாய் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் அன்புதான் தூய்மையானது.
ஒரு அம்மாவாக இது என் 21வது பிறந்தநாள். என் முதல் மகன் ஸ்ரீஹரி பிறந்து 21 வயதை கடந்துள்ளான். என்னுடைய அழகான திறமையான மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அத்தோடு எப்போதும் நீ என் லட்டு தான். உன் கனவுகள் அழைத்தும் நிறைவேற கடவுள் உன்னை ஆசீர்திக்கட்டும்’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகிறது.
பிற செய்திகள்:
- பொன்னியின் செல்வன் பற்றி மனம் திறந்த பேசிய ஐஸ்வர்யா ராய்!
- நடிகை தமன்னாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
- வைத்தியசாலையில் அனுமதியான சிவாங்கி-என்ன ஆச்சு-ஷாக்கான ரசிகர்கள்..!
- ஷூட்டிங் ஸ்பொட்டில் ஆற்றில் விழுந்த கார்- சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம்-நடந்தது என்ன..?
- அஜித்தின் வலிமையை முந்திய சிவகார்த்திகேயனின் டான்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
- AK 62 படத்தின் ரிலீஸ் எப்போ.. கசிந்த தகவல் இதோ.
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!