நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லத்தனம் என எந்த வேடமாக இருந்தாலும், அதில் தன்னை கச்சிதமாக பொருத்திக் கொண்டு ரசிகர்களை கவரக்கூடிய நடிகர்கள் சினிமாவில் வெற்றிகரமாக பயணிப்பது வழமையான ஒன்று. அப்படிப்பட்ட ஒரு நடிகர் தான் விச்சு விஸ்வநாதன்.
இவர் விஜயகாந்த் நடிப்பில், மறைந்த மணிவண்ணன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘சந்தனக் காற்று’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகி, பின் பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென்று தனி இடம் பிடித்து தற்போது வரை தனது நடிப்பு பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் தன்னுடைய சினிமாப் பயணம் பற்றி பல விடயங்களை பகிர்ந்திருக்கின்றார். அதாவது "என்னுடைய முதல் படத்தில் ஹீரோயின் கவுதமி, அவங்க ஒரு மிகப்பெரிய ஹீரோயின், என்னோட முதல் சீனே ரேப் சீன் தான், எனக்கு ரொம்பப் பயமாக இருந்தது, ஏனெனில் கவுதமி மிகப்பெரிய ஒரு ஹீரோயின், அவங்கள தொடலாமா வேணாமா என்று யோசிச்சிட்டே இருந்தேன், இதை நான் அவங்க கிட்டேயே நேரடியாக சொன்னேன்.
அதற்கு அவங்க "ஒண்ணும் கவலைப்படாதீங்க, நீங்க பயப்பிடவே வேணாம்" என்று சொன்னாங்க. அதன் மூலமாக எல்லாமே நாங்க பழகிற விதத்தில் தான் இருக்கு என்பதைப் புரிந்து கொண்டேன், முதல் நாள் ஷூட்டிங்கில் விஜயகாந்த் சார் எல்லாரையும் பார்த்தது எனக்கு ரொம்பவே பிரமிப்பாக இருந்திச்சு, இவ்வளவு நாளாக நான் நினைச்சது நிஜத்திலேயே நடக்கும் போது ரொம்பவே சந்தோசமாக இருந்தது" எனக் கூறி இருந்தார்.
மேலும் ரஜினி சார் எனது நெருங்கிய நண்பர், அவரும் நானும் ஒருமுறை ஊட்டி சென்ற போது ஒரே றூமில் தங்கினோம், அந்த சமயத்தில் அவர் கீழே படுத்துக் கொண்டு என்னை பெட்டில் தூங்க வச்சார் எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது சரத்குமார் சார் எனக்குப் பண்ணிய சப்போர்ட் ஐ என்னால் இப்பவும் மறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சுந்தர்.சி உடனான முதல் சந்திப்பு குறித்துப் பேசுகையில் "ஊட்டி படத்தில் நாங்க நடிகர், அவர் உதவி இயக்குநர். அப்போ ஆரம்பிச்ச நட்பு இப்போவாரைக்கும் நீடிச்சு இருக்கு" எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல நாங்க இப்போ ஒரே குடும்பமாகவும் மாறிட்டோம், ஏனெனில் அவன் என் தங்கச்சி குஷ்பூவை தான் கல்யாணமும் பண்ணியுள்ளான், இப்போ இந்தளவுக்கு நான் நல்லா இருக்கேன் என்றால் அதுக்கு அவரும் ஒரு முக்கிய காரணம் எனவும் தெரிவித்துள்ளார் நடிகர் விச்சு விஸ்வநாதன்.
Listen News!