1992 ஆம் ஆண்டு தலைவாசல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தலைவாசல் விஜய். தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்தார்.
இவர் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கவலைப்படாதே சகோதரா என்ற பாடல் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.தொடர்ந்து அழகு சீரியலிலும் நடித்தார். இந்நிலையில் இவருக்கு ஜெயவீனா என்ற மகள் உள்ளது.
இவர் நடிகராக இருந்த போதிலும் இவருடைய குழந்தைகளை விளையாட்டு வீரனாகவும்,வீராங்கனையாகவும் வளர்ந்துள்ளார்கள்.இவரின் மகள் ஜெயவீனா 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றிருந்தார்.
மேலும் இவருடைய 15 வயதில் கேரளாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் நீச்சல் பிரிவில் தங்கம் வென்ற அசத்தியிருந்தார். இந்நிலையில், தலைவாசல் விஜய் கூறியிருப்பதாவது தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் தொடங்கியதிலிருந்தே மகளுடன் தான் இருக்கிறேன். அவள் தங்கம் வெல்வதே எனது ஒரே இலக்காக இருந்தது.
இதற்கான அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்துவிட்டேன். இதற்கு முன் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த தேசிய போட்டியில் ஜெயவீனா ஒரு வெள்ளி 5 வெண்கலம் பதக்கங்களை வென்று இருந்தார். அப்போது எனது மகள் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்போது நனவாகி உள்ளது இனி அடுத்த இலக்கு சர்வதேச அளவிலான போட்டியில் தங்க பதக்கம் வெல்வது என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- தளபதி விஜய்யின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபிள் சர்ப்ரைஸ்- வேற லெவல் அப்டேட்டாக இருக்கே
- இல்லாத என்ன பற்றி பேச நீங்க யாரு-தன்னை விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த ஷிவாங்கி
- சின்ன பசங்களோட சேர்ந்து மசாலா படம் பண்ணியிருக்கிறாங்க-விக்ரம் படத்தை கழுவி ஊற்றிய புஃளூ சட்டை மாறன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!