• Sep 20 2024

என்னுடைய இதயத்துடிப்பு என் அப்பா- தந்தையர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் தனது கணவரான நடிகர் தனுஷை பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். இதனால் இருவரையும் சேர்த்து வைக்க பலரும் முயற்சி செய்தும் தனுஷ் சேர்ந்து வாழ விரும்பவில்லை.

இதனால் தற்பொழுது இருவரும் தமது கெரியரில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஐஸ்வர்யா டைரக்ஷன் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார். பாலிவுட், கோலிவுட் என ஒரே சமயத்தில் இரண்டு படங்களுக்கான வேலைகளை செய்து வருகிறார்.

வேலைகளில் மட்டுமல்ல தொடர்ந்து சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். சோஷியல் மீடியாவில் தான் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்வது, சைக்கிளிங் போவது போன்றவற்றின் போட்டோக்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு, தனது தந்தை ரஜினிகாந்துடன் இருக்கும் கியூட்டான போட்டோ ஒன்றை பகிர்ந்து, My heratbeat…happy father's day என கேப்ஷன் பதிவிட்டிருந்தார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ரஜினியின் ஸ்மைல் சூப்பர், போட்டோ சூப்பர் என பலரும் பாராட்டி கமெண்ட் போட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement