• Nov 17 2024

என் மீது அன்பு கொண்ட எல்லோருக்கும் என் உள்ளம் கனிந்த நன்றி; இசைஞானி இளையராஜா

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'அன்னக்கிளி' என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் 1976-இல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் இதுவரை 1000ற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனப் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் அதுமட்டுமல்லாது இவர் இசைத்துறையில் உயரிய விருது என அழைக்கப்படும் 'பத்ம பூஷன்' விருதையும் பெற்றிருக்கின்றார்.

இந்த நிலையில் இசைஞானி இளையராஜா இன்றைய தினம் தனது 78-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து ரசிகர்களும், திரைபிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவையில் நியமன எம்.பியாக நியமித்து மத்திய அரசு கௌரவப்படுத்தி உள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று இரவு வெளியானதில் இருந்தே இளையராஜாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில் இவருக்கு இந்தியப் பிரதமர் மோடி, முன்னணி நடிகர்கள் என ஏராளமான பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவர்கள் அனைவருக்கும் மொத்தமாக நன்றி தெரிவித்துள்ளார் இளையராஜா. அதாவது இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அதாவது "என் மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காக பாராட்டி வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாததால் எல்லோருக்கும் என் உள்ளம் கனிந்த நன்றி" என அவர் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement