இந்தி சினிமா நடிகைகளில் ஒருவராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராக்கி சாவந்த். இவர் மராட்டியத்தில் உள்ள மும்பை போலீஸில் நடிகை ஷெர்லின் சோப்ரா மீது பரபரப்பு புகார் ஒன்றினை அளித்து உள்ளார்.
அதாவது அந்தப் புகாரின் படி "யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நடிகை ஷெர்லின் சோப்ரா வீடியோ ஒன்றை கடந்த 6-ஆம் தேதி வெளியிட்டார். அதில், தனக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தி, தகாத வார்த்தைகளையும் பேசியுள்ளார் என தெரிவித்து உள்ளார் ராக்கி சாவந்த்.
மேலும் இதுதொடர்பாக ராக்கி சாவந்த் ஊடகத்தினரிடம் விரிவாக கூறும்போது "சோப்ராவின் பேச்சுகளால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. எனது சமீபத்திய காதலர் என்னை பார்த்து, ஷெர்லின் சோப்ரா கூறியதில் ஏதும் உண்மை இருக்கா? உண்மையில், எனக்கு 10 ஆண் நண்பர்கள் உள்ளனரா? என என்னிடம் கூச்சமின்றி கேட்கிறார்" எனக் கவலையுடன் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது "சோப்ரா வந்து, அவர் என்னைப் பற்றி என்ன கூற விரும்பினாரோ அதனை ஊடகத்திடம் கூறி விட்டு போய் விட்டார். அதற்கான பலனை இன்று நான் அணுஅணுவாக அனுபவிக்கிறேன்" எனவும் ராக்கி சாவந்த் வேதனையுடன் கூறியுள்ளார்.
இன்னொரு விடயம் என்னவெனில் இந்தி பட தயாரிப்பாளர் சஜித் கான் மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது கடந்த காலத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி சோப்ரா பரபரப்பு ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போது அவர்களுக்கு ஆதரவாக ராக்கி சாவந்த் பரிந்து பேசினார்.
இந்த நிலையில் தற்போது ராக்கி மற்றும் சோப்ரா இடையே மோதல் ஏற்பட்டு உள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராக்கி மற்றும் அவரது வழக்கறிஞர் மீதும் பதிலுக்கு சோப்ரா போலீஸில் புகார் அளித்து உள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீஸார் குறிப்பிடுகையில் "செய்தியாளர்கள் சந்திப்பில் தமக்கு எதிராக அவதூறு ஏற்படும் வகையிலான வீடியோவை 2 பேரும் வெளியிட்டு உள்ளனர். தகாத வார்த்தைகளையும் ராக்கி சாவந்த் பேசியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறாக இந்தி சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வருகின்ற இவர்கள் இருவரும் முட்டி மோதி வருவது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!