தென்னிந்திய சினிமாவில் முன்னணி வகிக்கும் நட்சத்திர நாயகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் அஜித். சினிமா ரசிகர்களால் 'தல' என்று வர்ணிக்கப்படும் இவரது படங்கள் திரையரங்குகளில் வெளியாகினால் ரசிகர்கள் அதை பட்டாசு வெடித்து ஆரவாரப்பட்டு கொண்டாடி மகிழ்வர். அந்த அளவிற்கு தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
கிட்டத்தட்ட 60 இற்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் நடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தினை லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
நம்ம அஜித் நடிகர் மட்டுமன்றி பன்முகப்பட்ட திறமைகளைக் கொண்ட ஒரு நபராகவும் விளங்கி வருகின்றார். அதாவது கார் ரேஸ், துப்பாக்கி சுடும் போட்டி போன்றவற்றில் பங்கு பற்றி தனது திறமைகளை வெளிபத்துபவராவார். அந்த வகையில் இவர் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு நான்கு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்தநிலையில் இவர் சமீபத்தில் வழங்கிய பேட்டி பற்றி தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அதாவது தனது துப்பாக்கி சுடும் ஆர்வத்தை பற்றியும், மேலும் பல போட்டிகளில் பங்குபற்றி "தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்காமல் தனது உயிர் போகாது" என்றும் கூறியுள்ளார். இவர் கூறிய போன்றே தற்போது அப்படிப்பட்ட போட்டிகளில் பங்கு பற்றி பெருமை சேர்த்து வருகின்றார்.
இந்த துப்பாக்கி சூடு போட்டியின் அடுத்தகட்டமாக தமிழ்நாட்டின் சார்பில் தென்னிந்திய அளவில் நடக்கவிருக்கும் துப்பாக்கி சூடு போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் இணையத்தில் வேகமாகப் பரவி வருவததோடு, அவருக்கு ரசிகர்கள் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- அடி மேல் அடி வாங்கும் இயக்குநர் ஷங்கர்…பட ஷூட்டிங் இடையில் நின்று போகும் அபாயம்!
- நம்ம விராட் கோலியின் மனைவியா இது..? வைரலாகும் லேட்டஸ் போட்டோ ஷூட்..!
- 38 வயசிலும் மூப்பின்றி இருக்கும் நடிகை சதா…இந்த வயசிலும் இப்படி இருக்காங்களே..!
- பரந்த மனப்பான்மையுடன் ரஜினி செய்த செயல்…பாராட்டும் ரசிகர்கள்..!
- ‘தி லெஜெண்ட்’ பட ஹீரோவின் மகளா இது..? இவ்வளவு அழகாக இருக்காங்களே..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!