• Sep 21 2024

என் நீண்டகால ஆசை நிறைவேறியது.நடிகர் விஷால் ஓபன் டாக். காரணம் என்ன தெரியுமா?

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான படம் தான் மார்க் ஆண்டனி  இதில் முன்னனி நடிகரான விஷாலுடன் இணைந்து, எஸ்.ஜே.சூர்யா, விஷ்னுபிரியா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைபெற்றதோடு   அதிக வசூலையும் குவித்து வருகின்றது


இந்த நிலையில்,  மார்க் ஆண்டனி பட வெற்றியை படக்குழு கொண்டாடி வருகிறது.
இப்படத்தின் வெற்றி விழா இன்று நடந்து வரும் நிலையில், விழாவில் பேசிய நடிகர் விஷால்,  மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஆரம்பத்திற்கு காரணமான நடிகர் விஜய், காத்தி, டி.ஆர்.ராஜேந்தர் ஆகியோருக்கு  நன்றி. எனவும்  மார் ஆண்டனி படம் 100 கோடி வசூலித்துள்ளது. இது நியாயமான வெற்றி; பகத்சிங், கஜினி முகமது ஆகியோர் எனக்குப் பிடித்தவர்கள், அவர்களைப் போல 16 வருடம் கழித்து வெற்றி பெற்றுள்ளேன். நீங்கள் கொடுக்கும் டிக்கெட் விலையில் ஒரு ரூபாயை  தமிழ் நாடு விவசாயிகளுக்கு செலவிடுவேன் என்று தெரிவித்திருந்தார்.
நீண்டநாள் ஆசை எப்படியாவது சில்க் ஸ்மிதாவை பார்த்துவிட வேண்டும் என நினைத்தேன். அது இந்த படம் மூலம் நடந்துள்ளது. சில்க் ஸ்மிதா போல் இருக்கும் விஷ்ணு பிரியாவை தேடி பிடித்து இப்படத்தில் நடிக்க வைத்த படக்குழுவுக்கு நன்றி எனவும்  விஷால் தெரிவித்துள்ளார் .

Advertisement

Advertisement