• Nov 19 2024

எனது திருமணம் இந்த நடிகரின் திருமணத்திற்குப் பிறகுதான்... நிகழ்ச்சியில் ஓப்பனாக பேசிய விஷால்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஷால் கடைசியாக நடித்த ஒரு சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுக்காததால் அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் வரும் 22-ம் தேதி இந்தியிலும் வெளியாகவுள்ளது. இதனையொட்டி வடமாநிலங்களிலும் விஷால் புரோமோசன் செய்து வருகிறார்.


இந்நிலையில் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிற விடயம் என்றால் அது விஷாலின் திருமணம் குறித்த செய்திகள் தான்.  அதாவது நடிகை லட்சுமி மேனனுடன், விஷால் டேட்டிங் செய்து வருவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தன. ஆனால் அது உண்மையல்ல எனக்கூறி விஷால் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். 


இருப்பினும் விஷாலின் திருமணம் எப்போது என ரசிகர்கள் அடிக்கடி கேட்ட வண்ணம் தான் உள்ளனர். அந்த வகையில் இந்தி ப்ரோமோஷனுக்காக விஷால் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு விஷால் பதிலளிக்கையில் "சல்மான்கான் திருமணம் செய்யட்டும், அதன் பிறகு நான் திருமணம் செய்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement