• Nov 19 2024

என்னுடைய திருமணம் ரகசியமாகத் தான் நடக்கும்- திடீரென அதிர்ச்சித் தகவலைக் கூறிய விஜய்தேவர்கொண்டா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் விஜய் தேவரகொண்டா. இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் 2017 -ம் ஆண்டு வெளியான "அர்ஜுன் ரெட்டி" படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார். தமிழில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான நோட்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இருப்பினும் இப்படம் வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை. இதனால் தெலுங்கு சினிமாவில் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றார்.இதனைத் தொடர்ந்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவருக்கு ஏராளமான ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது.தற்பொழுது இவர் சமந்தாவுடன் இணைந்து குஷி என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.


இந்தத் திரைப்படம் செப்டெம்பர் தாதம் 1ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திலிருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் சென்னையில் நேற்றைய தினம் படத்தின் ப்ரமோஷன் நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு பேசிய விஜய் தேவர்கொண்டா, இந்த குஷி படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார். திருமணம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு, நான் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். குழந்தையும் பெற்றுக்கொள்வேன். ஆனால் இப்போதைக்கு இல்லை.


நேரம் வரட்டும். எனக்கு வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்வதில் உடன்பாடு இல்லை. நன்றாக பேசி, பழகி, ஒரு 4,5 ஆண்டுகள் புரிந்துகொண்டு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.மேலும் நான் திருமணம் செய்துகொண்டால், யாருக்குமே தெரியாமல், ரகசியமாக தான் செய்வேன். உங்களிடம் சொல்ல மாட்டேன் என்று விஜய் தேவர்கொண்டா தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement