• Nov 10 2024

மயில்சாமியின் இறுதி படம்... 'கிளாஸ்மேட்ஸ்' படத்தின் விமர்சனம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான 'கிளாஸ்மேட்ஸ்' படத்தின் திரை விமர்சனத்தை பார்ப்போம்.

இந்த திரைப்படத்தில் குடி, கூட இருப்பவனையும் கெடுக்கும், அவன் வாழ்வையும் சிதைக்கும் என்ற கதையை கருவாகக் கொண்டு அமைந்துள்ளது.

கிளாஸ்மேட்ஸ் படத்தின் நாயகன் தன் மாமனுடன் சேர்ந்து நாள் முழுக்க குடிக்கிறார். கார் டிரைவராக இருக்கும் அவனால் விபத்து நேர்கின்ற சூழலை சந்தித்த நிலையில்,  காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாகிறார். அன்புக்கு இலக்கணமாக இருக்கும் தனது புது மனைவி மீது சந்தேகப்படுகிறார். அதனால் அவருக்கு வாழ்க்கையில் நிம்மதியும் இல்லாமல் போகிறது.

இவ்வாறு அவரின் நிம்மதியை அவனால் மீட்டெடுக்க முடிந்ததா இல்லையா? என்பது தான் மீதி கதையோட்டம்.

இந்த திரைப்படத்தின் நாயகனான அங்கயற்கண்ணன் வகைதொகை இல்லாமல், குடிப்பவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அதை எல்லாம் அப்படியே செய்து நடித்து காட்டியுள்ளார்.


மாப்பிள்ளையோடு சேர்ந்து குடிப்பதை முழு நேர பணியாக வைத்திருக்கிற இயக்குநர் சரவண சக்தி, அவரது அலம்பல் பேச்சு எல்லாம் ரசிக்க வைத்தாலும், பாத்ரூம் என நினைத்து பீரோவை யூரினால்  குளிப்பாட்டுவது எல்லாம் காமெடியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றே சொல்லலாம்.

இந்த படத்தில் மனைவியாக காணப்படும் நடிகை பிராண, லட்சணமாக படம்  முழுக்க அவர் அணிகின்ற உடைகள், பளிர் வண்ணங்களில் பளபளக்க கலர்ஃபுல்லான நைட்டிகளும் கணக்கு வழக்கிலாமல் உடுத்திக் கொண்டுதான் திரிகிறார்.

இவ்வாறு, இவர்கள் இருவரின் மனைவிகளும் கணவர் எவ்வளவுதான் குடித்துவிட்டு வந்தாலும் அவர்கள் மேல் கல்லை போட்டுக் கொள்ளாமல் அவர்கள் மீது அன்பை கொட்டுகிறார்கள்.

எந்த நேரமும் பாட்டிலுடன் தெரிகிற மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதேனும் ஒரு ஸ்பாட்டில் கறிசோறு கன்ஃபார்ம் ஆகி விடுவது திரைக்கதையில் இருக்கிற இரண்டாவது முக்கிய விஷயமாக காணப்படுகிறது.

மேலும், மயில்சாமி தான் நடித்தவற்றில் கடைசியாக டப்பிங் பேசிய படம் இது ஆகுமாம்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement