• Sep 21 2024

மைனா இல்லை... இந்தவாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தான்... அடித்துக் கூறும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் கிராண்ட் ஃபினாலே வரவுள்ள நிலையில், இந்த வாரம் கேப்டனாக மாறிய அமுதவாணனும் நாமினேஷன் பட்டியலில் எதிர்பாராதவிதமாக இடம் பிடித்துள்ளார். 


அத்தோடு இந்த வாரம் நாமினேஷன் சற்றே வித்தியாசமான முறையில் நடைபெற்றது. ரெட் கார்டு வந்தால் நாமினேஷன், க்ரீன் கார்டு வந்தால் ஒருவரை சேவ் செய்யலாம். மஞ்சள் கார்டில் இதுவரை என்ன விளையாடி கிழித்து விட்டீர்கள் என வாசகம் போட்டு பிக்பாஸ் டீமே இந்த சீசன் போட்டியாளர்களை தாறுமாறாக கழுவி ஊற்றி உள்ளது.

அந்தவகையில் இந்த வாரம் எப்படியாவது அசீமை வீழ்த்தி கேப்டனாக மாறி நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகி விடலாம் என பகல் கனவு கண்டு கொண்டிருந்த அமுதவாணனுக்கும் ரெட் கார்டு கொடுத்து நாமினேஷனை எதிர்கொள்ளுங்கள் என சக போட்டியாளர்கள் ஆப்பு வைத்து விட்டனர்.


அத்தோடு வழக்கம் போல இந்த வாரமும் அதிக ரெட் கார்டுகளுடன் அசீம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார். அசீமை தொடர்ந்து ஏடிகே, மணிகண்டன், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி மற்றும் கதிர் என ரச்சிதாவைத் தவிர வீட்டில் அத்தனை போட்டியாளர்களும் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கி உள்ளனர்.


மேலும் கடந்த வாரம் விளிம்பில் சிக்கி எஸ்கேப் ஆன மைனா நந்தினி, அசீம் இருவருமே இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். அவர்களை தொடர்ந்து கிட்னி ஸ்டோன் வலியால் அவதிப்பட்டு வரும் ஏடிகே மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரும் தற்போது டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.


இந்நிலையில் மணிகண்டன், மைனா நந்தினி மற்றும் ஏடிகே மூன்று பேரில் யார் வெளியே போனாலும் ரசிகர்களுக்கு ஹாப்பி தான். ஆனால் ஏடிகேவுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் அவரை இந்த வாரம் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் தொடர்ந்து 3 வாரங்களாக பெண் போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த வாரம் மைனா வெளியேறமாட்டார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement