• Sep 21 2024

வெளியாகி 1 மணி நேரத்தில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களைக் குவித்த நா ரெடி தான் பாடல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்திருப்பதால் இந்தப் படம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

படத்தின் முதல் ஷெட்யூல் காஷ்மீரில் தொடங்கி கடுமையான குளிரில் 52 நாட்கள் நடந்தது. அதன் பிறகு சென்னை பிரசாத் ஸ்டூடியோவிலும், பையனூரிலும் நடந்தது. தற்போது ஆதித்யராம் ஸ்டூடியோவில் நடந்துவருகிறது. 


கடந்த வாரம் 2000 டான்ஸர்களுடன் விஜய் ஆடிய பாடல் படமாக்கப்பட்டது. இப்போது படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.இந்த நிலையில் இப்படத்திலிருந்து நா ரெடி தான் என்னும் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் வெளியாகி 1 மணி நேரத்தில் 2.4 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத், பிக்பாஸ் அசல் கோளாறு ஆகியோர் பாடியிருக்கின்றனர் பாடலை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement