தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. ரவி என்ற பெயரைக் கொண்ட இவர் தனது அண்ணனின் இயக்கத்தில் அமைந்த 'ஜெயம்' என்னும் படத்தின் மூலமாகவே தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் காரணமாகவே அன்றிலிருந்து இன்றுவரை ஜெயம் ரவி என அழைக்கப்பட்டு வருகின்றார்.
அதனைத் தொடர்ந்து இன்றுவரை 25 இற்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது தற்போது இவரின் நடிப்பில் மணிரத்னத்தின் கனவுப்படமான 'பொன்னியின் செல்வன்' படம் வெளியாக இருக்கின்றது. இவருடன் இணைந்து இப்படத்தில் மேலும் பல பிரபலங்களும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழில் கால் பதிப்பதற்கு முன்னர் தெலுங்கு திரையுலகில் 1993-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னரே ஹீரோவாக மாறியவர் ஜெயம் ரவி. தற்போது இவர் 40 வயதை எட்டி விட்டாலும் இன்னும் காலேஜ் பாய் போல் யங் லுக்கிலேயே தான் இருந்து வருகின்றார்.
ஜெயம் ரவியின் குடும்ப வாழ்க்கை பற்றி பார்க்கும் போது, இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தியை காலேஜ் நிகழ்வொன்றில் தான் ஜெயம் ரவி முதன்முதலில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தம்பதியினருக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர்.
குடும்பத்தினருடன் சந்தோசமாக வாழ்க்கை நடாத்தி வருகின்ற ஆர்த்தி எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருபவர். அந்தவகையில் நேற்றைய தினம் கணவர் ஜெயம் ரவியின் பிறந்ததினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு இன்ஸ்டாவில் க்யூட்டான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார்.
இதற்குப் பல திரைப்பிரபலங்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நடிகை நதியாவும் தனது வாழ்த்தினை ஜெயம் ரவிக்கு தெரிவிக்கும் வகையில் "ஹாப்பி பர்த்டே குமரன்" பதிவு செய்து இருக்கின்றார். இவரின் இந்தப் பதிவு ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
ஏனெனில் 'எம்.குமரன் சண் ஆப் மஹாலட்சுமி' திரைப்படத்தில் குமரன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு அம்மாவாக இவரே நடித்திருக்கின்றார். இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை அதை நினைவுகூர்ந்து வருகின்றார் நதியா.
Listen News!