• Nov 19 2024

என்றுமே இளமையாக உள்ள நதியா... அவரின் கணவரா இது... ரொம்ப young ஆக இருக்காரே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் நடிகை நதியா. இவர் 1984-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'Nokketha Doorathu Kannum Nattu' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்


அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்துவந்த நதியா தமிழில் 'பூவே பூச்சூடவா' என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இவரின் முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகத் தொடங்கி விட்டனர்.

குறிப்பாக 1986-ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 10 படங்களுக்கு மேல் தமிழில் நடித்தார். குறைந்தளவான படங்களில் நடித்திருந்தாலும் அதிகளவான ரசிகர்களைக் கொள்ளை கொண்ட ஒருவராக இவர் விளங்கி வருகின்றார். அதில் சில படங்களுக்காக யாருமே எதிர்பாராத நேரத்தில் பிலிம்பேர் விருது வாங்கினார். 


இந்நிலையில் இவர் தற்போது ஆங்கிலத்தில் 'Wonder Women' படத்தில் நடித்துள்ளார். இவ்வாறாக படங்களில் பிஸியாக இருந்து வந்த நதியாவின் குடும்ப வாழ்க்கையை நோக்கின், நதியாவிற்கு 1988-ஆம் ஆண்டு சிரிஷ் என்பவருடன் திருமணம் நடந்தது, தற்போது இவர்களுக்கு சனம் மற்றும் ஜனா என இரு மகள்கள் உள்ளார்கள்.

திருமணத்தின் பின் -ஆலண்டனில் வசித்து வந்த நதியா கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் வந்து செட்டில் ஆகியுள்ளார். இன்றுவரை இளமை மாறாமல் இருக்கின்ற நடிகை என்றால் அது நதியா தான். அந்தவகையில் இவரின் கணவரின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இவரைப் போலவே கணவரும் இளமை மாறாத தோற்றத்தில் காட்சி அளிக்கின்றார்.


Advertisement

Advertisement