• Sep 20 2024

விஜய் தேவர்கொண்டாவிடம் முன்னாள் மருமகள் பற்றி விசாரித்த நாக அர்ஜுனா- தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவர் கொண்டா நடிப்பில் செப்டெம்பர் 1ம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் குஷி.

இப்படத்தில் சமந்தாவும் விஜய் தேவர்கொண்டாகும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால், திருமணமான பின் எதற்கு எடுத்தாலும் சண்டை பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. கடைசியில் என்ன ஆனது என்பதுதான் இப்படத்தின் மொத்தக் கதை.


இப்படம் வெளியாகிய மூன்று நாட்களில்  70.23 கோடி ரூபாய்  வசூலித்து இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் படக்குழுவினர்  ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். நேற்று தெலுங்கு பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்கிய நிலையில் அதில் ப்ரோமோஷனுக்காக விஜய் தேவர்கொண்டா கலந்துகொண்டார். ஆனால் சமந்தா வரவில்லை.

நடிகர் நாகர்ஜுனா தான் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்குகிறார். அவர் சமந்தாவின் முன்னாள் மாமனார் என்பதும் யாவரும் தெரிந்ததே. இந்த நிகழ்ச்சிக்கு சென்ற விஜய்தேவர்கொண்டா, நாக அர்ஜுனிடம் பேசினார். அப்போது, விஜயை வரவேற்ற நாக அர்ஜுனா படத்தின் கதாநாயகி எங்கே என கேட்டார். 


 அதற்கு பதில் சொன்ன 'விஜய் தேவர்கொண்டா சமந்தா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். மயோசிட்டிஸ் சிகிச்சை பெறுவது மட்டுமின்றி குஷி ப்ரோமோஷனும் செய்து வருகிறார்' கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement