தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் தான் நடிகர் நாக சைதன்யா.
இவர் சமந்தாவை விவாகரத்து செய்தபின்னர் பல காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார். அதற்கெல்லாம் அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார்.
அவர் முழுநேரமாக சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். எனினும் தற்போது நாக சைதன்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து இருக்கும் கஸ்டடி படத்தில் நடித்து முடித்து உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் மே 12ம் தேதி வெளியாக இருக்கும் அந்த படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.
நாக சைதன்யா விவாகரத்துக்கு பின்னர் சமந்தா உடன் இருந்த வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறுஇருக்கையில் தற்போது 15 கோடிக்கு ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வீடு வாங்கி குடியேறி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறார்.
Listen News!