டைம் லூப் கதையை மையமாக் கொண்டு கடந்த ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் மாநாடு. இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இவர் தற்பொழுது தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகின்றார்.
இப்படம் தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளார். கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியது. தெலுங்கில் இப்பூஜையை போயபத்தி ஶ்ரீனு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். கேமராவை ராணா ஆன் செய்தார். தமிழில் இயக்குநர் இமயம் பாரதிராஜா கிளாப் அடித்து துவக்கி வைத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கேமராவை ஆன் செய்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பிரபல முன்னணி ஒளிப்பதிவாளர் S.R. கதிர் இணைந்துள்ளார்.இவர் கற்றது தமிழ் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர். அதனைத்தொடர்ந்து பருத்தி வீரன் , சுப்ரமணியபுரம், நாடோடிகள்,ஈசன், போராளி, நீ தானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், கிடாரி, ராஜதந்திரம், வெற்றிவேல், லென்ஸ், அசுரவதம், கொடி வீரன், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவை தந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!