தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் காலத்திற்கு காலம் பல நடிகர், நடிகைகளும் தோன்றிய வண்ணம் தான் இருக்கின்றனர். அதில் ஒரு சிலர் மட்டும் விறல் விட்டு எண்ணக் கூடிய வகையில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் எவ்ளோ காலம் ஆனாலும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்குவது இல்லை. அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவரே நகுல்.
இவர் பிரபல இயக்குநரான சங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். அதுமட்டுமல்லாது நகுல் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான தேவயானியின் தம்பி என்பதும் நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம்.
அறிமுகப் படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்திய நகுல், அதனைத் தொடர்ந்து 'காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இவர் தற்போது சின்னத்திரையிலும் ஜொலித்து வருகின்றார். அதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பணியாற்றி வருகின்றார்.
இவ்வாறாக பல வழிகளிலும் தனது திறமையை நிலை நாட்டி வந்த நகுல் 2016-ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப பந்தத்தில் இணைந்தார். இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு பெண் குழந்தை உண்டு.
இந்நிலையில் இவர் தனது மனைவியுடன் இணைந்து சமீபத்தில் அஜித் படப்பாடல் ஒன்றினை பாடி இருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் கணவன், மனைவி இருவரினதும் குரலிற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது இந்த வீடியோ ஆனது தற்போது வைரலாகியும் வருகின்றது.
Listen News!