• Sep 20 2024

"நல்லா நடி மேன் அடுத்த அவார்ட்ஸ் ஃபங்க்ஷன்லயாவது ஏதாவது கிடைக்கும்- விஜய் டிவியை கேலி பண்ணிய பாக்கியலட்சுமி கோபி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக் பஞ்சம் இல்லாமலும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமலும் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலே விஜய் டிவி விருது விழாவில் பெஸ்ட் சீரியல் என்ற விருதையும் பெற்றது.

இது தவிர பாக்கியாவாக நடிக்கும் சுசித்ராவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவுக்கு சிறந்த நடிகை என்ற விருதும் செல்வியாக நடிக்கும் கம்பன் மீனாவுக்கு சிறந்த காமெடி நடிகைக்கான விருதும் கிடைத்தது.


இந்த விருது விழாவில் கோபியாக நடிக்கும் சதிஷ் கலந்துகொள்ளவே இல்லை. அவருக்கு எந்த விருதும் கொடுக்கப்படவில்லை.தான் சீரியலில் இருந்து விலகுவதாக விருது விழா முடிந்த மறுநாளே அறிவித்தார் சதீஷ். இருப்பினும் ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் மகன் எழில் உடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் கோபி, "நல்லா நடி மேன்.. அடுத்த அவார்ட்ஸ் ஃபங்க்ஷன்லயாவது ஏதாவது கிடைக்கும். வேண்டாம்.. உங்க அன்பு போதும்" என பதிவிட்டு இருக்கிறார்.

கோபி விஜய் டிவியை தாக்கி பேசி இருப்பதை பார்த்து ரசிகர்களும் கமெண்டில் விமர்சித்து வருகின்றனர்.மேலும் சிறந்த நடிகராக இருக்கம் கோபிக்கு விருது வழங்க மறுப்பது ஏன் என்றும் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement