• Nov 14 2024

நந்தினி கதாபாத்திரத்தின் இன்ஸ்பயரால் உருவானது தான் படையப்பாவில் வரும் நீலாம்பரி காரெக்டர்- ரஜினி பகிர்ந்த முக்கிய விடயம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரமாண்ட இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகமானது செப்டெம்பர் மாதம் 30ம் திகதி மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில்  விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.


இந்த நிலையில் நேற்றைய தினம் இப்படத்தின் இசைவெளியீடடு விழாவானது சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,  விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பேசியவர்,  “நான் பொதுவாக பக்கங்களை கணக்கு வைத்து தான் புத்தகம் படிப்பேன். பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்கள் 2000 பக்கங்கள் என்றார்கள். அப்போதே வேண்டாம் என சொல்லி விட்டேன்” என குறிப்பிட்டார்.

மேலும் பேசியவர், படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு பொன்னியின் செல்வன் பட கேரக்டருடன் இருக்கும் அசத்தலான ஒற்றுமை குறித்து ரிவீல் செய்து இருந்தார்.  அதன்படி, “படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி கதாபாத்திரம், பொன்னியின் செல்வன் நாவலில் வரும் நந்தினி கதாபாத்திரத்தை இன்ஸ்பயர் செய்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தான்” என அவர் கூறி இருந்தார்.


ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நீலாம்பரி என்னும் ஐகானிக் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்று வரை, தமிழ் சினிமாவில் முக்கியமான பெண் கதாபாத்திரங்களில் இந்த கதாபாத்திரம் வலுவானது என்பது குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement