• Sep 20 2024

படத்திற்காக புகைத்துத் தள்ளிய நந்திதா... என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களே... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் சில நடிகர், நடிகைகள் வாய்ப்பிற்காக எப்படியானதொரு ரோலிலும் நடிக்க தயங்கமாட்டார்கள். அதிலும் குறிப்பாக கிளாமர், மது அருந்துதல், புகைப்பிடித்தல், படுக்கை காட்சி என்று பல சீன்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.


அந்தவகையில் சினிமாவில் குடும்பபெண்ணாக தன்னுடைய நடிப்பை ஆரம்பித்து அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த ஒருவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா' என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக குமுதா கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.


இதன்பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்து பல பட வாய்ப்புக்கள் வந்து குவிய அப்படங்களில் எல்லாம் நடித்து ஹிட் கொடுத்து வந்தார். இருப்பினும் சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் கிளாமர் போட்டோஷூட்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பகிர்ந்து வந்தார்.


இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் 'ரத்தம்' என்ற படத்தில் மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன் போன்ற நடிகைகளுடனும் இணைந்து நந்திதாவும் நடித்துள்ளார். மாடர்ன் பெண்ணாக இப்படத்தில்  நடித்துள்ள நந்திதா அப்படத்தில் புகைப்பிடித்து தள்ளியும் இருக்கின்றார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில்  சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன.


Advertisement

Advertisement