• Nov 17 2024

பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று வரும் நானியின் தசரா திரைப்படம்- படம் எப்படி இருக்கு?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் இருந்து வெளியான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் போன்ற பான் இந்தியா படங்கள் வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ள திரைப்படம் தான் தசரா. இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா என்கிற அறிமுக இயக்குநர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நானியும், கீர்த்தி சுரேஷும் ஜோடியாக நடித்துள்ளனர். 

தசரா திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரிலீச் ஆகி உள்ளது. இப்படத்தின் அதிகாலை காட்சியை பார்த்த நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்களது கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.


இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கிட்டத்தட்ட பாசிடிவ் விமர்சனங்களையே அளித்து வருகின்றனர். படம் பிரமாதமாக இருப்பதாகவும், திரைக்கதை அருமை என்றும் பார்வையாளர்களிடம் இருந்து விமர்சனம் வருகிறது. அதிலும் குறிப்பாக நானியின் நடிப்புக்கு 100 மார்க் கொடுக்கலாம் என்றும் பதிவிட்டு வருகின்றனர். அவரது கேரியரில் இதுவே சிறந்த படமாக இருக்கும் எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

புதுமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுக்கும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக இப்படத்தில் செண்டிமெண்டும், ஆக்‌ஷன் காட்சிகளும் அட்டகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. சிலரோ சில்க் ஸ்மிதாவின் எபிசோடுடன்.. படத்தில் வரும் கிரிக்கெட் எபிசோடும் போரடிக்கிறது என்கிறார்கள். மிக முக்கியமாக, இப்படத்தின் நாயகன் நானிக்கு தேசிய விருது  கிடைக்கும் எனவும் பாராட்டி வருகின்றனர்.


கீர்த்தி சுரேஷ் நேர்த்தியான நடிப்பால் அசத்துகிறார் என்றும் படத்தில் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் இருந்தாலும் சில காட்சிகள் சற்று டல் அடிப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சந்தோஷ் நாராயணாவின் பின்னணி இசை படத்தின் திரைக்கதை நகர்வுக்கு பக்க பலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்னொரு டுவிட்டில் நானியும் கீர்த்தி சுரேஷும் வேறலெவலில் நடித்துள்ளதாக பாராட்டி உள்ள நெட்டிசன்கள் கிளைமாக்ஸ் காட்சி அதகளமாக இருப்பதாக பாராட்டி உள்ளனர். மொத்தத்தில் தசரா அல்டிமேட் என்று பாராட்டி உள்ளதோடு, படம் பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் எனவும் கூறி வருகின்றனர்.


மொத்தத்தில் தசரா படம் பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது. தசரா பான் இந்தியா அளவில் எந்த மாதிரியான சாதனைகளை திரையரங்குகளில் படைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement